search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை லாரிகள் ஸ்டிரைக்"

    மதுரையில் இன்று 3-வது நாளாக லாரிகள் ஸ்டிரைக் நீடிக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. #LorryStrike

    மதுரை:

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று 3-வது நாளாக லாரிகள் ஓடவில்லை.

    மதுரை மாவட்டத்தில் இன்று 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. லாரிகள் ஓடாதததால், வெளி மாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களான பருப்பு உள்பட பல பொருட்கள் மதுரைக்கு வரவில்லை.

    இதேபோல் மதுரையில் இருந்தும் வெளி மாநிலங்களுக்கு பொருட்கள் அனுப்பப்படவில்லை. தொடர்ந்து லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் காய்கறிகள் தற்போது மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகின்றன. முட்டைகோஸ், கேரட், பீட்ரூட் போன்ற மலை காய்கறிகள் வரத்து கனிசமாக குறைந்து விட்டது. எனவே லாரி ஸ்டிரைக்கை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #LorryStrike

    ×